Pages

செவ்வாய், 24 மே, 2011

தி.மு.க.,வுடன் சேர்ந்ததால் பலம் போச்சு : புதிய நீதிக்கட்சி




""தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்ததால், புதிய நீதிக்கட்சியின் பலம் குறைந்து போனது,'' என, அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார். புதிய நீதிக் கட்சியின் பொதுக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பேசியதாவது: புதிய நீதிக்கட்சி துவங்கிய போது, பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என நான் சொன்ன போது, வைத்தே ஆகவேண்டும் என நிர்வாகிகள் சொன்னதால் கூட்டணி வைத்து, தோற்றோம்.
அதன் பிறகு அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க முயன்று முடியாமல் போனது. இருந்தாலும், இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்டோம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அளவிற்கு கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும்.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றே நான் கட்சி துவங்கினேன். அதனால், என் கல்லூரிகளுக்கு சிக்கல் வந்ததால், இரண்டு கல்லூரிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. கட்சியை வளர்க்க, முன்னெடுத்துச் செல்ல துடிப்புள்ள இளைஞர்கள் வாருங்கள். நான் எல்லாம் செய்கிறேன். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் போது செலவில் பாதியை ஏற்கிறேன். இவ்வாறு சண்முகம் பேசினார். கூட்டத்தில், 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக