Pages

ஞாயிறு, 29 மே, 2011

முதலியார்கள் கவனத்திற்கு --சாதி வாரி கணக்கெடுப்பு

பெருமைக்குரிய முதலியார் குல சொந்தங்களே,
வரும் ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.எனவே நமது முதலியார் சமுதாயம் உள்ளடக்கிய ஆற்காடு முதலியார் ,அகமுடைய முதலியார், வெல்லல முதலியார் அனைவரும் "துளுவ வெள்ளாளர் " என்று மட்டும் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம் ..துளுவ வெள்ளாளர் என்று ஒட்ட்ருமையாக போட்டால்தான் நமக்கு அணைத்து சலுகையும் கிடைக்கும்..மாறாக ஆற்காடு அல்லது அகமுடைய என்று போட்டால் அது வேறு சாதிக்கு பொய் விடும்..எனவே தயுவு சித்து நமது சமுதாய சொந்தங்களுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு "துளுவ வெள்ளாளர்"என்று பயன்படுத்துமாறு இன வுனர்வுடன் சொல்லிகொள்கிறோம்.இங்ஙனம் தமிழ் மாநில முதலியார் பெருங்குடி மக்கள்.

"வீழ்வது நாமாக இருப்பினும் ,வாழ்வது நமது முதலி இனம் என்பதை என்றும் மறவாதீர்கள் "

புதன், 25 மே, 2011

முதல்குரல் நமது சமுதாய இதழ்

முதல்குரல் இதழை வாங்குவதற்கு கீழ்கண்ட மினஞ்சல் முகவரிக்கு உங்கள் அட்ரசை அனுபவும். ஒரு வாரத்தில் உங்கள் வீடு தேடி முதல்குரல் வந்து சேரும் .

muthalkural@yahoo.com

அதிமுக அமைச்சரவையில் நமது சொந்தங்கள்

அதிமுக அமைச்சரவையில் நமது சொந்தங்கள்
திரு .அக்ரி கிருஷ்ணமூர்த்தி -உணவு துறை அமைச்சர்

திரு .டாக்டர் .விஜய் - சுகாதாரத்துறை அமைச்சர்

இவர்கள் பனி சிறக்க முதலியார் சங்கம் வாழ்த்துகிறது .

செவ்வாய், 24 மே, 2011

தி.மு.க.,வுடன் சேர்ந்ததால் பலம் போச்சு : புதிய நீதிக்கட்சி




""தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்ததால், புதிய நீதிக்கட்சியின் பலம் குறைந்து போனது,'' என, அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார். புதிய நீதிக் கட்சியின் பொதுக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பேசியதாவது: புதிய நீதிக்கட்சி துவங்கிய போது, பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என நான் சொன்ன போது, வைத்தே ஆகவேண்டும் என நிர்வாகிகள் சொன்னதால் கூட்டணி வைத்து, தோற்றோம்.
அதன் பிறகு அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க முயன்று முடியாமல் போனது. இருந்தாலும், இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்டோம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அளவிற்கு கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும்.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றே நான் கட்சி துவங்கினேன். அதனால், என் கல்லூரிகளுக்கு சிக்கல் வந்ததால், இரண்டு கல்லூரிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. கட்சியை வளர்க்க, முன்னெடுத்துச் செல்ல துடிப்புள்ள இளைஞர்கள் வாருங்கள். நான் எல்லாம் செய்கிறேன். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் போது செலவில் பாதியை ஏற்கிறேன். இவ்வாறு சண்முகம் பேசினார். கூட்டத்தில், 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இலங்கை தூதரகம் முன்பு புதிய நீதிக்கட்சி நாளை ஆர்ப்பாட்டம்

ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி இலங்கை தூதரகம் முன்பு புதிய நீதிக்கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் கூ‌றியு‌ள்ளா‌ர்.இது தொட‌ர்பாக அவ‌‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், இலங்கையில் இராணுவத்தினர் விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறிக்கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தையே அழித்துக் கொண்டு இருக்கின்றனர். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று போர் விதிகளின்படி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் மீது குண்டுமழை பொழிந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள்.உலகில் உள்ள அத்தனை நாடுகளும் இலங்கை அரசின் இச்செயல்பாடுகளை வன்மையாக கண்டித்துள்ளன. ஐ.நா.சபை இலங்கை அரசின் மீது மனித உரிமைகளை மீறி படுகொலைகள் நிகழ்த்தியதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.இந்த தருணத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். அமெரிக்க நாட்டில் 4 ஆயிரம் பேர்களுக்கு மேல் பலியான இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டித்து நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் ஐ.நா.சபை அறிக்கையின்படி 40 ஆயிரம் பேர்களை ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவையும், அதற்கு உறுதுணையாய் இருந்த மற்றவர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தி சென்னை மாவட்டத்தின் சார்பில் நாளை காலை 10 மணியளவில் இலங்கை தூதரகம் முன் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.வெள்ளைச்சாமி தலைமையிலும், பொருளாளர் ஏ.சி.எஸ்.ஏ.ரவிக்குமார் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இதில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், இளைஞரணி, ஏ.சி.எஸ்.பேரவை, திரு.வி.க. தொழிற்சங்கம், மருத்துவரணி, அனைத்து முதலியார் முன்னேற்றப் பேரவை, மாணவரணி, வழக்கறிஞரணி, தொண்டரணி, வ.உ.சி. பேரவை, செங்குந்தர் பேரவை ஆகிய சார்பு அணிகளை சேர்ந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ளும்படிஏ.‌சி.ச‌ண்முக‌ம் கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர். ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி இலங்கை தூதரகம் முன்பு புதிய நீதிக்கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் கூ‌றியு‌ள்ளா‌ர்.இது தொட‌ர்பாக அவ‌‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், இலங்கையில் இராணுவத்தினர் விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறிக்கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தையே அழித்துக் கொண்டு இருக்கின்றனர். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று போர் விதிகளின்படி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் மீது குண்டுமழை பொழிந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள்.உலகில் உள்ள அத்தனை நாடுகளும் இலங்கை அரசின் இச்செயல்பாடுகளை வன்மையாக கண்டித்துள்ளன. ஐ.நா.சபை இலங்கை அரசின் மீது மனித உரிமைகளை மீறி படுகொலைகள் நிகழ்த்தியதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.இந்த தருணத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். அமெரிக்க நாட்டில் 4 ஆயிரம் பேர்களுக்கு மேல் பலியான இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டித்து நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் ஐ.நா.சபை அறிக்கையின்படி 40 ஆயிரம் பேர்களை ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவையும், அதற்கு உறுதுணையாய் இருந்த மற்றவர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தி சென்னை மாவட்டத்தின் சார்பில் நாளை காலை 10 மணியளவில் இலங்கை தூதரகம் முன் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.வெள்ளைச்சாமி தலைமையிலும், பொருளாளர் ஏ.சி.எஸ்.ஏ.ரவிக்குமார் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இதில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், இளைஞரணி, ஏ.சி.எஸ்.பேரவை, திரு.வி.க. தொழிற்சங்கம், மருத்துவரணி, அனைத்து முதலியார் முன்னேற்றப் பேரவை, மாணவரணி, வழக்கறிஞரணி, தொண்டரணி, வ.உ.சி. பேரவை, செங்குந்தர் பேரவை ஆகிய சார்பு அணிகளை சேர்ந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ளும்படி ஏ.‌சி.ச‌ண்முக‌ம் கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

சனி, 12 பிப்ரவரி, 2011

புதிய நீதிக் கட்சி ,திமுக கூட்டணியில் போட்டியிடும்

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம், தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம். மீண்டும் தமிழக முதல்வராக கருணாநிதி ஆட்சியை பிடிப்பது உறுதி. எங்களுக்கு 25 சட்டமன்ற தொகுதிகளில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகள் உள்ளன. 100 தொகுதிகளில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் உள்ளன. மேலும் 50 தொகுதிகளில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வாக்குகள் உள்ளன.இந்த தேர்தலில் எங்கள் வாக்கு தி.மு.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். இந்த தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும். விஜயகாந்த் அ.தி.மு.க. பக்கம் போகும் பட்சத்தில் போட்டி கடுமையானதாக இருக்கும். பல்வேறு தொகுதிகளில் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி தோல்விகள் இருக்கும்.இத்தேர்தலை பொறுத்த வரை சிறிய கட்சிகள் என எந்த கட்சியையும் ஒதுக்க முடியாது. இத்தேர்தலில் விலைவாசி உயர்வு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசும் விற்பனை வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை ஏறுவதால் பல்வேறு பொருட்களின் விலை ஏறும்.விலை ஏற்றம் தேர்தல் நேரத்தில் பிரச்சனையை உண்டாக்கும். வசதி படைத்தவர்கள் எஸ்.சி., எம்.பி.சி., பி.சி., உள்ளிட்ட எந்த பட்டியலில் இருந்தாலும் அவர்களை நீக்கி முற்பட்ட வகுப்பாக கருத வேண்டும். அப்போது தான் இட ஒதுக்கீட்டின் பயன் ஏழைகளுக்கு கிடைக்கும். தமிழக மீனவர்களை சிங்கள அரசு கொல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சண்முகம்.கருணாநிதிக்கு வ.உ.சி விருதுசண்முகம் தொடர்ந்து பேசுகையில், மார்ச் 6-ந் தேதி வேலூரில் எங்கள் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுகிறது. அதில் தமிழக முதல்வர் கருணாநிதி பங்கேற்பார். அக்கூட்டத்தில் அவருக்கு வ.உ.சி. விருது வழங்க உள்ளோம்.வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம். எத்தனை தொகுதிகள் என்று இப்போது கூற முடியாது என்றார் அவர்.சமீபத்தில்தான் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பெயரை சூட்டுவதாக மத்திய அரசு அறிவித்தது. தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்தே தற்போது திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதாக ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.