செவ்வாய், 24 மே, 2011
இலங்கை தூதரகம் முன்பு புதிய நீதிக்கட்சி நாளை ஆர்ப்பாட்டம்
ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி இலங்கை தூதரகம் முன்பு புதிய நீதிக்கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இராணுவத்தினர் விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறிக்கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தையே அழித்துக் கொண்டு இருக்கின்றனர். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று போர் விதிகளின்படி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் மீது குண்டுமழை பொழிந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள்.உலகில் உள்ள அத்தனை நாடுகளும் இலங்கை அரசின் இச்செயல்பாடுகளை வன்மையாக கண்டித்துள்ளன. ஐ.நா.சபை இலங்கை அரசின் மீது மனித உரிமைகளை மீறி படுகொலைகள் நிகழ்த்தியதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.இந்த தருணத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். அமெரிக்க நாட்டில் 4 ஆயிரம் பேர்களுக்கு மேல் பலியான இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டித்து நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் ஐ.நா.சபை அறிக்கையின்படி 40 ஆயிரம் பேர்களை ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவையும், அதற்கு உறுதுணையாய் இருந்த மற்றவர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தி சென்னை மாவட்டத்தின் சார்பில் நாளை காலை 10 மணியளவில் இலங்கை தூதரகம் முன் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.வெள்ளைச்சாமி தலைமையிலும், பொருளாளர் ஏ.சி.எஸ்.ஏ.ரவிக்குமார் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இதில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், இளைஞரணி, ஏ.சி.எஸ்.பேரவை, திரு.வி.க. தொழிற்சங்கம், மருத்துவரணி, அனைத்து முதலியார் முன்னேற்றப் பேரவை, மாணவரணி, வழக்கறிஞரணி, தொண்டரணி, வ.உ.சி. பேரவை, செங்குந்தர் பேரவை ஆகிய சார்பு அணிகளை சேர்ந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ளும்படிஏ.சி.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார். ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி இலங்கை தூதரகம் முன்பு புதிய நீதிக்கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இராணுவத்தினர் விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறிக்கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தையே அழித்துக் கொண்டு இருக்கின்றனர். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று போர் விதிகளின்படி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் மீது குண்டுமழை பொழிந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள்.உலகில் உள்ள அத்தனை நாடுகளும் இலங்கை அரசின் இச்செயல்பாடுகளை வன்மையாக கண்டித்துள்ளன. ஐ.நா.சபை இலங்கை அரசின் மீது மனித உரிமைகளை மீறி படுகொலைகள் நிகழ்த்தியதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.இந்த தருணத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். அமெரிக்க நாட்டில் 4 ஆயிரம் பேர்களுக்கு மேல் பலியான இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டித்து நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் ஐ.நா.சபை அறிக்கையின்படி 40 ஆயிரம் பேர்களை ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவையும், அதற்கு உறுதுணையாய் இருந்த மற்றவர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தி சென்னை மாவட்டத்தின் சார்பில் நாளை காலை 10 மணியளவில் இலங்கை தூதரகம் முன் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.வெள்ளைச்சாமி தலைமையிலும், பொருளாளர் ஏ.சி.எஸ்.ஏ.ரவிக்குமார் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இதில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், இளைஞரணி, ஏ.சி.எஸ்.பேரவை, திரு.வி.க. தொழிற்சங்கம், மருத்துவரணி, அனைத்து முதலியார் முன்னேற்றப் பேரவை, மாணவரணி, வழக்கறிஞரணி, தொண்டரணி, வ.உ.சி. பேரவை, செங்குந்தர் பேரவை ஆகிய சார்பு அணிகளை சேர்ந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ளும்படி ஏ.சி.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக