சனி, 12 பிப்ரவரி, 2011
புதிய நீதிக் கட்சி ,திமுக கூட்டணியில் போட்டியிடும்
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம், தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம். மீண்டும் தமிழக முதல்வராக கருணாநிதி ஆட்சியை பிடிப்பது உறுதி. எங்களுக்கு 25 சட்டமன்ற தொகுதிகளில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகள் உள்ளன. 100 தொகுதிகளில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் உள்ளன. மேலும் 50 தொகுதிகளில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வாக்குகள் உள்ளன.இந்த தேர்தலில் எங்கள் வாக்கு தி.மு.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். இந்த தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும். விஜயகாந்த் அ.தி.மு.க. பக்கம் போகும் பட்சத்தில் போட்டி கடுமையானதாக இருக்கும். பல்வேறு தொகுதிகளில் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி தோல்விகள் இருக்கும்.இத்தேர்தலை பொறுத்த வரை சிறிய கட்சிகள் என எந்த கட்சியையும் ஒதுக்க முடியாது. இத்தேர்தலில் விலைவாசி உயர்வு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசும் விற்பனை வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை ஏறுவதால் பல்வேறு பொருட்களின் விலை ஏறும்.விலை ஏற்றம் தேர்தல் நேரத்தில் பிரச்சனையை உண்டாக்கும். வசதி படைத்தவர்கள் எஸ்.சி., எம்.பி.சி., பி.சி., உள்ளிட்ட எந்த பட்டியலில் இருந்தாலும் அவர்களை நீக்கி முற்பட்ட வகுப்பாக கருத வேண்டும். அப்போது தான் இட ஒதுக்கீட்டின் பயன் ஏழைகளுக்கு கிடைக்கும். தமிழக மீனவர்களை சிங்கள அரசு கொல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சண்முகம்.கருணாநிதிக்கு வ.உ.சி விருதுசண்முகம் தொடர்ந்து பேசுகையில், மார்ச் 6-ந் தேதி வேலூரில் எங்கள் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுகிறது. அதில் தமிழக முதல்வர் கருணாநிதி பங்கேற்பார். அக்கூட்டத்தில் அவருக்கு வ.உ.சி. விருது வழங்க உள்ளோம்.வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம். எத்தனை தொகுதிகள் என்று இப்போது கூற முடியாது என்றார் அவர்.சமீபத்தில்தான் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பெயரை சூட்டுவதாக மத்திய அரசு அறிவித்தது. தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்தே தற்போது திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதாக ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)